FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 16 ஜூலை 2026, 3:55 pm IST
வினோதினி தொடரின் காட்சி. - படம்: விடியோ கிளிப்
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு வினோதினி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம் தொடருக்குப் பிறகு வினோதினி தொடரில் நடித்துவரும் ஆர்த்திகாவுக்கு இந்தத் தொடரில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற வினோதினி எவ்வாறு போராடுகிறாள் என்பதை மையப்படுத்தி இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ராணுவத்தில் பணிபுரியும் வினோதினியின் கணவர் ஒரு விபத்தில் காணாமல்போன நிலையில், கணவரின் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இந்தத் தொடரின் மையக்கரு.

மேலும் இந்தத் தொடரில் கிருஷ்ணா, சல்மா, அப்சர், அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வினோதினி தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்த வினோதினி தொடர், விரைவில் நிறைவடையவுள்ளது இந்தத் தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Filming for the serial Vinothini, currently airing on Sun TV, has concluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments