முகப்பு

பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

59 வினாடிகள் முன்பு
பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தன் சித்தியின் சூழ்ச்சிகளை அறியாமல், அவரைக் கண்மூடித்தனமாக நம்பும் நாயகனை, திருமணம் செய்யும் நாயகி (பூங்கொடி), சித்தியின் சதிகளையும் முறியடித்துத் தன் கணவனை எவ்வாறு நல்வழிக்குக் கொண்டு வருகிறாள் என்பதே இந்தத் தொடரின் கதை.

இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் பாண்டி கமல் - ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்தத் தொடரில் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சிராணி பாத்திரத்தில் நடித்த காயத்ரி மற்றும் கரிகாலன் பாத்திரத்தில் நடித்த விமல் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

பூங்கொடி தொடர் கடந்த 2025 பிப். 3 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், பூங்கொடி தொடர் நவ. 30 ஆம் தேதி முதல் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை தொடர்ந்து 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

பூங்கொடி தொடர் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள தகவல், இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

The broadcast time for the serial 'Poongodi', currently airing on Sun TV, is set to be changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.