முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

திருச்சியில் சனிக்கிழமை நடந்த சாலைவிபத்தில் உணவக தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 23 ஜூலை 2018, 8:49 am IST
பகிர்:

திருச்சியில் சனிக்கிழமை நடந்த சாலைவிபத்தில் உணவக தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் திரவியராஜ் (52).  உணவக தொழிலாளி. இவர் சனிக்கிழமை மாலை செந்தண்ணீர்புரத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  சென்னை-மதுரை பிரதான சாலையில் செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு நகரப்பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த திரவியராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திருச்சி  மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments