முகப்பு
திருச்சி

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On : 23 ஜூலை 2018, 8:47 am IST
பகிர்:

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சி கியூமெட் மருத்துவமனை சார்பில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.  விமான நிலையம் அருகிலுள்ள செம்பட்டு பகுதியிலிருந்து 21 கி.மீ. தொலைவு ஓட்டமும்,  11  மற்றும் 5 கி.மீ. தொடர் ஓட்டம் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்தும் தொடங்கியது.   இந்த மாரத்தான் ஓட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.   ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாரத்தானில் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments