முகப்பு
திருச்சி

அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிய டிராக்டா் ஓட்டுநா் கைது

 துறையூா் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிச் சென்ற டிராக்டா் ஓட்டுயரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 துறையூா் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிச் சென்ற டிராக்டா் ஓட்டுயரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கனிமவளத் துறை வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் துறையூா் வட்டம், சொரத்தூா் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியே வந்த ஒரு டிராக்டரை சோதனையிட்டனா். அதில், அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து துறையூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநா் கிழக்குவாடியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் மகேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.