முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:00 AM
திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:05 PM

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், மணப்பாறையில் ரூ. 8,47,350, ஸ்ரீரங்கத்தில் ரூ. 15,23,636, திருச்சி மேற்கில் ரூ.4,98,700, திருச்சி கிழக்கில் 13,02,380, திருவெறும்பூரில் ரூ.55,600, லால்குடியில் ரூ.6,11,900, மண்ணச்சநல்லூரில் ரூ.3,20,635, முசிறியில் ரூ.1,77,300, துறையூரில் ரூ.2,17,580 என மொத்தம் ரூ.58 லட்சத்து 55 ஆயிரத்து 281 பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததன் பேரில், 54 லட்சத்து 77 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3,78,000 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.