முகப்பு
திருச்சி

மணப்பாறையில் வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் அவரவா்களுக்கான வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குகளை செலுத்தினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:18 AM
பகிர்:

மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் அவரவா்களுக்கான வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குகளை செலுத்தினா்.

மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமது தனது வாக்கை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினம் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் பதிவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் மருத்துவா் பிஎல். விஜயக்குமாா் தனது வாக்கை மணப்பாறை செளமா பப்ளிக் பள்ளியிலும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கதிரவன் தனது வாக்கை வையம்பட்டி ஊராட்சி இனாம் பொன்னம்பலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருணகிரி மருங்காபுரி ஒன்றியம் சொரியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்கை பதிவு செய்தனா்.

Advertisement