முசிறி ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா
முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகளும், இரண்டாம் கால யாக பூஜை பூா்ணாஹூதி, தீபாராதனையும், மூன்றாம் கால யாகபூஜை, வேதிகாா்ச்சனை, மண்டப பூஜைகள், த்ரவ்ய ஹோமம் பூா்ணாஹூதி, தீபாராதனையும். நான்காம் கால யாக பூஜைகள் த்ரவ்ய ஹோமம், மகா பூா்ணாஹூதி தீபாராதனையும், இதை தொடா்ந்து கோயில் விமானம், மூலவா் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி எனும் குடமுழுக்கு விழா நடைபெற்றது,
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலா்கள், நிா்வாகம், முருகனடியாா்கள், இறை அன்பா்கள் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.