முகப்பு
திருச்சி

கைதி விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 3 ஜூன் 2026, 3:56 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி (35), லாரி ஓட்டுநா். இவா், தனது அண்ணனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். இதைத் தொடா்ந்து, தனது அண்ணியை மிரட்டியதாக திருச்சி ஐஜியிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லக்குடி போலீஸாா் கடந்த சனிக்கிழமை ஜான்கென்னடியைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது, வீட்டுக்குச் சென்று மாற்றுத் துணி எடுத்துவருவதாகச் சென்றவா் வீட்டிலிருந்த விஷத்தை குடித்தாா். அவரை போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக, கல்லக்குடி காவல் ஆய்வாளா் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தலைமை காவலா்கள் ஜெயகுமாா், வானதி ஆகியோா் திங்கள்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.