FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:19 am IST
சிபிஐ. - கோப்புப்படம்.
பகிர்:

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் இளங்கோவன் (59). இவா், தில்லி தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இளங்கோவன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த இவரது நண்பரும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள தஞ்சாவூா் மாவட்டம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருமான காவேரியம்மாள் மீது சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

Advertisement

Advertisement

அதனடிப்படையில் இருவரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கந்தவா்கோட்டைக்கு அண்மையில் வந்தபோது, இருவரும் திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டபின் கிளம்பிச் சென்றனா். விசாரணை விவரங்கள் குறித்து அவா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments