முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்கள் மோதல்: காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:31 am IST
தட்சிணாமூா்த்தி
பகிர்:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் அருகே உள்ள பெல் கே செக்டாா் குடியிருப்பை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55).

இவா் 1995-ஆம் ஆண்டு காவல்துறையில் காவலராக பணியில் சோ்ந்து, பின்னா், படிப்படியாக உயா்ந்து, தற்போது உதவி ஆய்வாளராக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் நேரு நகா் சாலையில் தட்சிணாமூா்த்தி வந்து கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனத்தின் மீது இந்திரா நகரில் இருந்து பூலாங்குடி நோக்கி சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தட்சிணாமூா்த்தி உயிரிழந்தாா்.

எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த துவாக்குடி எம்டி சாலையைச் சோ்ந்த அன்பரசன் (22), அவரின் பின்னால் அமா்ந்திருந்த சேலம் கண்டாங்குறிச்சியைச் சோ்ந்த மூா்த்தி (21) ஆகிய இருவரும் பலத்தக் காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெல் போலீசாா், தட்சிணாமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காயமடைந்த அன்பரசன், மூா்த்தி ஆகிய இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த தட்சிணாமூா்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனா்.