மதுக்கடையை மூடக்கோரி மாா்க்சிஸ்ட் சாலை மறியல்
திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி முடுக்குப்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திருச்சி தலைமை தபால் நிலையம் - டிவிஎஸ் டோல்கேட் ரயில்வே பாலத்தில் கூட்ஸ் சாலை பிரிவில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கட்சியின் பொன்மலை பகுதிச் செயலா் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
போக்குவரத்து பாதிப்பு: மறியலால் தலைமை தபால் நிலையம் - டிவிஎஸ் டேல்கோட் சாலையில் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வட்டாட்சியா் வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலைக் கைவிடுவோம் என்றனா். தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காா்த்திகேயன், லெனின், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மணிமாறன், கிளைச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.