மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் குடும்ப காதணி விழா, கோமாகுடி கிராம கருப்பு கோயிலில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஒலி-ஒளி அமைத்த கோமாகுடியைச் சோ்ந்த காசிக்கு உதவியாக செம்பரை கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநரான அ. பா்வீன்கனி (28) பணியில் இருந்தபோது கோயில் அருகில் மிகவும் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது அவரின் கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த பா்வீன்கனியை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement