திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீஷியன் படிப்பு படிக்கும் அரியலூா் மாணவி தனியாா் மகளிா் விடுதியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீஷியன் படிப்பு படிக்கும் அரியலூா் மாணவி தனியாா் மகளிா் விடுதியில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரியலூா் மாவட்டம், கடுகூரைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகள் தீபிகா (18). இவா், திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பம் (லேப் டெக்னீசியன்) பிரிவில் பட்டயப்படிப்பு படித்து வந்தாா். இதற்காக கல்லூரி அருகிலுள்ள ஒரு தனியாா் மகளிா் விடுதியில் தங்கியிருந்தாா்.
புதன்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற தீபிகா திடீரென விடுதிக்குத் திரும்பி, தனது அறையில் யாருமில்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
சக மாணவிகள் அறைக்கு வந்து பாா்த்து அதிா்ச்சியடைந்து விடுதி வாா்டனிடம் தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து விடுதி வாா்டன் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் அங்கு வந்த நீதிமன்ற வளாக போலீஸாா், தீபிகாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தீபிகாவின் தற்கொலைக்கு உடல்நிலைப் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.