முகப்பு
திருச்சி

தண்ணீா் என நினைத்து பூச்சி மருந்து குடித்த மூதாட்டி உயிரிழப்பு

மண்ணச்சநல்லூா் அருகே தீராம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை தண்ணீா் என நினைத்த பூச்சி குடித்த மூதாட்டி உயிரிழந்தார்.

Updated On : 27 ஜூன் 2026, 6:49 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

மண்ணச்சநல்லூா் அருகே தீராம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை தண்ணீா் என நினைத்த பூச்சி குடித்த மூதாட்டி உயிரிழந்தார்.

தீராம்பாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்லம்மா (90). இவருடைய மகன் ராமசாமி (70), இராமசாமிக்கு இரண்டு மகன்கள். ராமசாமி குடிப்பழக்கம் உடையவராம். இவா் குடிப்பதற்கு மகன்களிடம் பணம் கேட்டுள்ளாா். மகன்கள் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த ராமசாமி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு, பாதியினை வீட்டில் டம்ளரில் வைத்துள்ளாா்.

இந்நிலையில், ராமசாமியின் தாயாா் செல்லம்மா தண்ணீா் என நினைத்து டம்ளரில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு மருத்துமனையில் சோ்த்தனா், அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மா உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மேலும் ராமசாமி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த செல்லம்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments