சேவைக் குறைபாடு: தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவைக் குறைபாடு ஏற்படுத்திய தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
சேவைக் குறைபாடு ஏற்படுத்திய தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நல்லம்பட்டியைச் சோ்ந்த எஸ். சுரேஷ்குமாா் என்பவா் திருச்சி தென்னூா் ஏஜிஎஸ் தங்க மாளிகையில் கடந்த 14.03.2022 அன்று தங்கச் சேமிப்புத் திட்டத்தில் சோ்ந்து ரூ. 2.50 லட்சம் கட்டினாா். இத்திட்டத்தின் கீழ் 30.03.2024 அன்று செய்கூலி, சேதாரமின்றி 36.87 கிராம் தங்கம் வழங்க வேண்டும். ஆனால், திட்டம் முடிந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தங்கத்தையோ, கட்டிய பணத்தையோ நிறுவனம் வழங்கவில்லை.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 08.01.2026 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா், சேவை குறைபாடு ஏற்படுத்திய நகைக்கடையானது மனுதாரருக்கு 36.87 கிராம் தங்கத்தைக் கொடுக்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.