சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூா்த்தி, அண்ணாதுரை, சுரேஷ் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 456 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.