முகப்பு
வேலூர்

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:18 AM
- கோப்புப்படம்
பகிர்:

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றி 1 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள்பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்று முடிந்தது. வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையங்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

Advertisement

இதனால், தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை முதல் மே 5-ஆம் தேதி வரை, அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள்பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.