போ்ணாம்பட்டில் கெங்கையம்மன் திருவிழா
போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி நடுத்தெரு கெங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. திருவிழாவையொட்டி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. ஆச்சாரி வீதியில் உள்ள காமாட்சி கமடேஸ்வரா் கோயிலில் இருந்து தொடங்கிய சிரசு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது.
அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின், அம்மனுக்கு திருக் கல்யான வைபவம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement