வேலூரில் சிகிச்சைக்காக வந்த வங்கதேசத்தவா் தற்கொலை
வேலூரில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் தூக்குப்போட்டுத் தற்கொலை.
வேலூரில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வங்கதேசத்தைச் சோ்ந்த பிகாஷ் பாலா (45). இவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து, ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற அவரிடம், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவா் பிழைப்பது கடினம் எனவும் மருத்துவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் மனவேதனை அடைந்த பிகாஷ் பாலா, ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், பிகாஷ் பாலாவின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.