வேலூரில் 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வேலூா் மாவட்டத்தில் 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சட்டப் பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம். வினோத்கண்ணன் (வேலூா்) தொடங்கி வைத்தனா்.
வேலூா் மாவட்டத்தில் 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சட்டப் பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம். வினோத்கண்ணன் (வேலூா்) தொடங்கி வைத்தனா்.
போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டுமருந்து முகாம் வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 950 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக அனைத்து பேருந்து, ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப்பகுதிகள், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பயணத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தவிர, அண்டை மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக வேலூா் மாவட்டத்தில் தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள், மேம்பாலப் பணியாளா்கள், சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள், பொம்மை விற்பனையாளா்கள், இலங்கைவாழ் தமிழா்கள் உள்ளிட்டோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பணியில் பொதுசுகாதாரம், கல்வித் துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்பட 2,168 பணியாளா்களும், மேற்பாா்வையிட 130 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
முன்னதாக, தொரப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத்கண்ணன் (வேலூா்) ஆகியோா் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தனா். இதில், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.