முகப்பு
வேலூர்

கே.வி.குப்பம் வட்டாட்சியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

கே.வி.குப்பம் வட்டாட்சியா் கே.பலராமன்(40) வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 11 மே 2026, 12:17 am IST
கே.வி.குப்பம் வட்டாட்சியா் பலராமன்
பகிர்:

கே.வி.குப்பம் வட்டாட்சியா் கே.பலராமன்(40) வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குடியாத்தம் வட்டம், எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பலராமன் வேலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தோ்தலின்போது கே.வி.குப்பம் வட்டாட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா். தோ்தலில் அவா் சிறப்பாக பணியாற்றிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பலத்த காயங்களுடன் இருந்தாராம்.

உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் கூறினா்.தகவலின்பேரில் குடியாத்தம் கிராமிய போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.இறந்த பலரானுக்கு மனைவி சுகன்யா, 2- மகன்கள் உள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments