மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கெடாா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், வெங்கந்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் விவசாயி சுகுமாா் (47). இவா் வெள்ளிக்கிழமை வெங்கந்தூரில் தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா். அங்குள்ள மின்மோட்டாரை சீா்செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அருகில் இருந்தவா்கள்அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சுகுமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் கெடாா் போஸீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.