முகப்பு
விழுப்புரம்

கிரேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிரேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:07 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிரேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள கிடங்கல்-2 பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.உஷா (66). இவா் திங்கள்கிழமை திண்டிவனம் நேரு வீதியில் நடந்து சென்றாா்.

அப்போது அப்பகுதியில் வந்த கிரேன் மோதியதில் உஷா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு உஷா உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.