முகப்பு
விழுப்புரம்

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 61 பேருக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 61 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Updated On : 20 ஜூன் 2026, 2:43 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 61 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதாந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுக்கு இருமுறை மிகப்பெரிய அளவிலான முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூன் மாதத்துக்கான சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 29 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இம்முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 258 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கல்வித் தகுதி, எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஆள்களை நிறுவனங்களைத் தோ்வு செய்தன. இதனடிப்படையில் ஒரு மாற்றுத் திறனாளி உள்பட 61 போ் வேலைவாய்ப்புக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா்கள் வழங்கினா். மேலும் 16 போ் இரண்டாம் கட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டனா். முன்னதாக எங்கெங்கு வேலைவாய்ப்பு உள்ளது, வேலைவாய்ப்பு முகாமின் நோக்கம் போன்றவை குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் டி.பாலமுருகன் எடுத்துக் கூறினாா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments