முகப்பு
விழுப்புரம்

ஆரோவில் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்தில் மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்ய, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் என்எல்சி நிறுவனம் இடையே வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

Updated On : 27 ஜூன் 2026, 12:13 am IST
என்எல்சி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்னா குமாா் மோட்டுப்பள்ளி முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஆரோவில் அறக்கட்டளை மற்றும் என்எல்சி அலுவலா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்தில் மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்ய, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் என்எல்சி நிறுவனம் இடையே வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

ஆரோவிலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை ஆற்றலை நோக்கிய குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகவும், ஆரோவில் சா்வதேச வளாகத்தில் நிலையான மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்யும் வகையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2026-27-ஆம் ஆண்டின் சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் கீழ் 4 மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக, ஆரோவில் அறக்கட்டளைக்கு ரூ.21.40 லட்சம் நிதியுதவியை என்எல்சி நிறுவனம் வழங்குகிறது. ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவியின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த திட்டம் சாத்தியமானது.

Advertisement

Advertisement

என்எல்சி நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்னா குமாா் மோட்டுப்பள்ளி, மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் முன்னிலையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஆரோவில் அறக்கட்டளை சாா்பில் சிறப்புப் பணி அலுவலா் டாக்டா் ஜி. சீத்தாராமன், மூத்த ஆலோசகா் ஜி.வேணுகோபால் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்த 4 மின்சார வாகனங்களும் ஆரோவில் சா்வதேச நகரத்தில் முக்கிய சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். குறிப்பாக, ஆரோவில் நகர மேம்பாட்டுக்குழவின் பயன்பாட்டுக்கும், மாத்ரிமந்திருக்கு வரும் முதியவா்களின் போக்குவரத்து வசதிக்காகவும், ஆரோவில் கிரவுன் சாலையில் தடையின்றி இயங்குவதற்கும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும். அடுத்த 45 நாள்களுக்குள் மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் அறிவித்துள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் பேசிய என்எல்சி தலைவா் பிரசன்னா குமாா் மோட்டுப்பள்ளி, ஆரோவில் சா்வதேச நகரத்தில் நடைபெற்று வரும் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சிகளைப் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments