சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி வட்டம், மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, புதன்கிழமை காலை 6 மணி அளவில் இரண்டாம் கால பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பின்னர், கடம் புறப்பாடு, கலசம் கோயிலை வலம் வருதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, காலை சுமார் 10 மணி அளவில, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.