வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம் தொடர்பாக, உச்ச நீதின்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூரில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம் தொடர்பாக, உச்ச நீதின்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூரில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தச் சட்டத்தை எதிர்த்து, மும்பையைச் சேர்ந்தவர் தொடுத்த வழக்கில், வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அதே பழைய வடிவிலேயே மீண்டும் அமல்படுத்தக் கோரியும் கடலூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலவரங்களைத் தடுக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்கள் இல.திருமேனி, சிவகுருநாதன், ஜோதிலிங்கம், கோவிந்தன், சதீஷ்குமார், மு.சரிதா, சபரி, பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வழக்குரைஞர்கள் பி.புருஷோத்தமன், க.வெற்றிகொண்டான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.