ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
கடலூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் டி.மணிவாசகம் தலைமையில் ஒரு பிரிவாகவும், எம்.சேகர் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மோதல் போக்கு கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கத்திலும் நிலவுகிறது. இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடியில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திட்டக்குடி வட்டாட்சியர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி, டி.மணிவாசகம் தரப்பினர் திங்கள்கிழமை கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கே.வெங்கடேசன், பி.ஜெயராஜ், பொருளர் என்.சுந்தர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலர் டி.மணிவாசகம், மாவட்டத் தலைவர் பி.துரை, பொதுசெயலர் வி.குளோப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.