கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஆனந்தன் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் பி.சகிலன், புதுவை மாநிலத் தலைவர் அ.மு.சலீம் ஆகியோர் கண்டன சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி பொதுமக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையால் ஏற்படும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சேனல்களின் விலையேற்றத்தை ஏழை மக்களின் மீது திணித்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கும் வகையிலான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். கேபிள் டிவிக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் ஜி.கதிர்காமன், நிர்வாகிகள் கே.செந்தில்குமார், ஜெ.ஆனந்தராஜ், ஜி.பாபு, ஆர்.பிரபு, கே.ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.