முகப்பு
கடலூர்

நிலுவை ஊக்கத் தொகையை வழங்க முந்திரி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

முந்திரி ஏற்றுமதிக்கான நிலுவை ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Updated On : 23 ஜூலை 2018, 8:58 am IST
பகிர்:

முந்திரி ஏற்றுமதிக்கான நிலுவை ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சங்கக் கூட்டம் பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் தலைமை வகித்தார். செயலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்தியன் வங்கியின் கடலூர் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், மண்டல துணை மேலாளர் சேகர், நெய்வேலி கிளை மேலாளர் ராஜசேகர், பண்ருட்டி கிளை மேலாளர் ராமராஜன் ஆகியோர் கலந்துகொண்டு முந்திரி தொழில் வளர்ச்சிக்கு வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கினர். கரூர் வைசியா வங்கி சார்பில் விழுப்புரம் மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன், பண்ருட்டி கிளை மேலாளர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டு வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
தீர்மானங்கள்: முந்திரி விற்பனையானது உள்நாடு, வெளிநாட்டு சந்தைகளில் மந்த நிலையில் உள்ளது. அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே இதற்குக் காரணம். இதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வது. முந்திரி ஏற்றுமதிக்கு வழங்கி வந்த 5 சதவீத ஊக்கத் தொகை, 2014-ஆம் ஆண்டு முதல் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊக்கத் தொகை மீண்டும் 2018-ஆம் ஆண்டு முதல் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இடைப்பட்ட 4 ஆண்டுகளுக்கான 3 சதவீத எஞ்சிய ஊக்கத் தொகையை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஜெயமூர்த்தி, எழிலரசன், விஜயகாந்த், பாரதிதாசன், சிவக்குமார், மணிவண்ணன், ராஜா, பாலகிருஷ்ணன், சிவா, மோகன், பிரசாத், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் சி.ஆர்.செல்வமணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments