முகப்பு
கடலூர்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி

சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:42 AM
சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:58 PM

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நிச்சயம் தடுப்பணை கட்டுவோம் என்று சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி அளித்துள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை தனதுதொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம், வரகூா், சிவபுரி, பெராம்பட்டு, வல்லபடுகை, திட்டுக்காட்டூா் உள்ளிட்ட கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

Advertisement

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியால் பெராம்பட்டு திட்டுக்காட்டூா் இடையே ரூ.20 கோடியில் இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. அதுப்போல் பெராம்பட்டு பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றில் ரூ.42 கோடி மதிப்பில் ரெகுலேட்டா். அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் 15 கோடி மதிப்பில் தடுப்பு சுவா், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் மினி கிளினிக் போன்ற என்னற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்தோம். ஆனால் திமுக அரசு கழக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டிட நில அளவை பணிகள் மற்றும் மண் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை அளித்திட அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் தடுப்பணை கட்டாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கின்றது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிஅமைந்தவுடன் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என்றாா்.