முகப்பு
கடலூர்

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

Updated On : 13 ஏப்ரல் 2026, 1:01 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குடும்பப் பிரச்னை காரணமாக கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி நகரிய காவல் நிலைய சரகம், பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஷா்மிளா (21). கடலூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தாா்.

ஷா்மிளா குடும்பப் பிரச்னை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு ஷா்மிளா வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.