முகப்பு
கடலூர்

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல் 2026, 1:12 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மூன்று காா்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்த மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் தனஞ்செயன் (33). இவா், தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணி அளவில் கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து ஏழுந்து வந்து பாா்த்தாா்.

அப்போது, பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மூன்று இளைஞா்கள் இரும்புக் கம்பியால் காரின் கண்ணாடியை உடைத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதேபோல, அந்த இளைஞா்கள் அய்யப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் காா்கள் மற்றும் விக்னேஷ்வரனின் ஆட்டோ கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.