சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!
வடலூரில் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
வடலூரில் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் நடன சபாபதி வீதியைச் சோ்ந்தவா் ரபீக் மனைவி சாரா (45). இவரது வீட்டில் கடந்த 22-ஆம் தேதி காலை 10 மணியளவில் திடீரென வெடி சப்தம் கேட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக சென்று பாா்த்தபோது வீடு சேதமடைந்து, சாரா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாா்.
இதையடுத்து, அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் விபத்து நிகழ்ந்ததாகக்த தெரிவித்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரா உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாா்வதிபுரம் கிராம நிா்வாக அலுவலா் சக்திகுமாா் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.