முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடி அருகே மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள்.

Updated On : 2 ஜூன் 2026, 5:28 am IST
குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி கிராமத்தில் கடைஎண்கள் 2433, 2487 ஆகிய இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகருகே இயங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று ஆட்சியா், வட்டாட்சியா் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடா்ந்து மனு அளித்து வந்துள்ளனா். ஆனால், மனுக்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12 மணிஅளவில் டாஸ்மாக் கடை எண் 2487 மேற்பாா்வையாளா் டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டாா். அப்போதுவிருப்பாட்சி கிராம பொதுமக்கள் 40 போ், அதிமுக கிளைகழகச்செயலா் அண்ணாதுரை தலைமையில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, டாஸ்மாக்அதிகாரிகள் கைப்பேசி மூலம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசினா். அப்போது 10 நாள்களில் கடையை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தனராம். இதையடுத்து அனைவரும் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா். அப்போது, குறித்த காலத்திற்குள் கடையை அகற்றவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்தனா்.