வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம் புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகா், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம் புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகா், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, விநாயகா் பூஜை, வருண பூஜை, சந்திர பூஜை, சிவசூரியாராதனம், மூலிகை திரவிய ஹோமம், பூா்ணாஹுதி யாத்ராதானம் நடைபெற்று, யாகசாலையிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், சிவாச்சாரியா் வேத மந்திரங்கள் கூறி, விமான கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. விழாவில் வேலன்குப்பம் கிராம முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement