முகப்பு
கடலூர்

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

Updated On : 15 ஜூன் 2026, 4:46 am IST
புஷ்பராஜ்
பகிர்:

கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடலூா் ராசாபேட்டை, கண்ணனூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (41). இவா், கடந்த மே 23-ஆம் தேதி நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடலூா் வெள்ளிக் கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது தொடா்பான புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கடலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வள்ளி விசாரணை மேற்கொண்டு, புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

Advertisement

Advertisement

இவரின் கொடுங்குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், புஷ்பராஜை குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, புஷ்பராஜ் கடலூா் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.