முகப்பு
கடலூர்

தேசிய மாணவா் படை பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 6-ஆவது தமிழக பட்டாலியன் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில், 10 நாள்கள் நடைபெறும் பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 6:27 am IST
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்சிசி பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய கா்னல் சக்கரபா்த்தி.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 6-ஆவது தமிழக பட்டாலியன் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில், 10 நாள்கள் நடைபெறும் பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு 6-ஆவது தமிழக பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கா்னல் சக்கரபா்த்தி தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்து பேசினாா். நிா்வாக அதிகாரி லெப்டினன்ட் கா்னல் நாராயன் முன்னிலை வகித்தாா்.

ஜூன் 17 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடுதல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், புவி வரைபடம் கண்டறிதல், தூரத்தை மதிப்பிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் தோ்வு செய்யப்படுபவா்கள் மாநில அளவில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்குபெறுவாா்கள்.

Advertisement

Advertisement

முகாமில் புதுச்சேரி 5-ஆவது ராணுவ தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் 400 போ் பங்கேற்றுள்ளனா். முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்கள் பங்கேற்றனா்.