முகப்பு
கடலூர்

மொபெட் மீது சரக்கு வாகனம் மோதல்: பெண் உயிரிழப்பு

Updated On : 23 ஜூன் 2026, 12:56 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மொபெட் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வாணாதிராயபுரம் அஞ்சல், தென்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பம்மாள் (51). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கணவா் குணசேகருடன் மொபெட்டில் சென்றாா்.

குறிஞ்சிப்பாடி அண்ணா நகா் நான்குமுனை சந்திப்பு அருகே சென்றபோது, மொபெட் மீது அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே குப்பம்மாள் உயிரிழந்தாா். குணசேகா் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments