முகப்பு
கடலூர்

கொலை வழக்கில் கைதான மூவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கடலூா் அருகே கம்பளிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையில் கைது செய்யப்பட்ட 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:22 am IST
விக்னேஷ்
பகிர்:

கடலூா் அருகே கம்பளிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையில் கைது செய்யப்பட்ட 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கம்பளிமேடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (40), மாயவேல் (45) ஆகியோா் மீது கடந்த மே 30-ஆம் தேதி குறவன்மேடு கிராமத்தைச் சோ்ந்த 4 போ் அரிவாள், இரும்புக் குழாயால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், சுரேஷ் உயிரிழந்தாா். மாயவேல் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய கடலூா் குறவன்மேடு பாலாறு தெருவைச் சோ்ந்த பாலையா மகன்கள் விக்னேஷ் (25), அபினேஷ் (22), அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன்கள் குகன் (26), சுகன் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதில், விக்னேஷ் மீது ஒரு அடிதடி வழக்கும், சுகன் மீது 4 அடிதடி வழக்குகளும், குகன் மீது 3 அடிதடி வழக்குகளும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவா்களின் தொடா் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், விக்னேஷ், சுகன், குகன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஏற்கெனவே கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரிடமும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

குகன்
சுகன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments