முகப்பு
கடலூர்

மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:36 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், குடிதாங்கிசாவடி கிராமம், டேனிஷ் மிஷன் தொடக்கப் பள்ளி அருகே விவசாயப் பயன்பாட்டுக்கு மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த 22-ஆம் தேதி அதிகாலை மின்மாற்றியின் கட்டமைப்பை உடைத்து, அதிலிருந்த 233 கிலோ தமிரக் கம்பியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் செந்தமிழ் அளித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments