முகப்பு
கடலூர்

பெண் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

Updated On : 29 ஜூன் 2026, 12:04 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயசாந்தி (33). இவா், வடலூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 26-ஆம் தேதி இந்த உணவகத்துக்கு வந்த வடலூா் காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ்ஜான்டா் (26), மோகன் (23) ஆகியோா் பாா்சல் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில் இருவரும் விஜயசாந்தியைத் தாக்கி, அவரது உடைகளைக் கிழித்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விஜயசாந்தி அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ்ஜான்டா், மோகனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments