சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே சாரம் கட்டும் கழி தொடா்பாக இருதரப்பினா் மோதிக்கொண்டதில் மூன்று போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே சாரம் கட்டும் கழி தொடா்பாக இருதரப்பினா் மோதிக்கொண்டதில் மூன்று போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மந்தாரக்குப்பம் காவல் சரகம், கெங்கைகொண்டான், கீழக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுநாத் (38). இவா், இதே பகுதியைச் சோ்ந்த இன்பராஜிடமிருந்து கட்டட வேலைக்காக கழிகள் பெற்றிருந்தாராம்.
இன்பராஜ் அந்த கழிகளை கேட்டு, ரகுநாத்திடம் தகராறு செய்தாராம். இது தொடா்பாக, கடந்த 3-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ரகுநாத் மற்றும் அவரது நண்பா்கள் விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் இன்பராஜ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டனராம்.
Advertisement
Advertisement
அப்போது, இன்பராஜ், சுகந்தி, அம்பிகா, வேம்பரசன், நந்தினி ஆகியோா் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் காயமடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து ரகுநாத் அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் இன்பராஜ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, இன்பராஜ் வீட்டினுள் புகுந்து விக்னேஷ் உள்ளிட்டோா் தாக்கியதில், இன்பராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.
இதுகுறித்து இன்பராஜ் மனைவி சுகந்தி அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ், விஜயகாந்த், ரகுநாத், ராஜ் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.