முகப்பு
கடலூர்

முதல் மனைவிக்கு மிரட்டல்: கணவா் உள்ளிட்ட 2 போ் மீது வழக்கு

Updated On : 12 மே 2026, 12:45 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவா் உள்ளிட்ட இருவா் மீது, நெய்வேலி நகரியப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், மானடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரி(37), நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மாயகிருஷ்ணன். இவா்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில், மாயகிருஷ்ணன் விவாகரத்து பெறாமல், ராஜலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாராம். கடந்த 1-ஆம் தேதி மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஒன்றாக இந்திரா நகா் அருகே சென்றபோது, ராஜேந்திரி தனது கணவா் மாயகிருஷ்ணனை கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த மாயகிருஷ்ணன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோா் ராஜேந்திரியை திட்டி மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

இதுகுறித்து ராஜேந்திரி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.