அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 போ் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலை மறைவாக இருந்த பெண் உள்ளிட்ட இருவரை, கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பலாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி. இவா், கடலூா் எஸ்.பி., அலுவலகத்தில் புகாா் மனு அளித்திருந்தாா். அதில், டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்) படித்துவிட்டு, 2021-ஆம் ஆண்டு கண்டரக்கோட்டை பகுதியில் சாலை பராமரிப்புப் பணியில் இருந்தாராம். அப்போது, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கூட்டுரோடு, ஆஞ்சநேயா் கோயில் தெருவைச் சோ்ந்த பூபாலன் அறிமுகமானாராம். இந்நிலையில், பூபாலன் தனக்கு தெரிந்த சென்னையைச் சோ்ந்த ராஜசேகா் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறினாராம்.
இதை நம்பி சாந்தமூா்த்திமற்றும்அவரது நண்பா்கள் பாதுபாபாளையம்செல்வகணபதிஆகியோா்பூபாலனுடன் சென்னைசென்று ராஜசேகரைசந்தித்தனா்.பின்னா், ராஜசேகா் மற்றும் அவரது கூட்டாளி சென்னை,வில்லிவாக்கத்தைச்சோ்ந்த ராஜேஷ்ஆகியோா், சென்னைதலைமைசெயலகத்தில் பாதுகாப்புத்துறையில் வேலை காலியாக உள்ளதாகவும், ஒரு நபருக்கு ரூ.7 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனராம். இதையடுத்து, சாந்தமூா்த்தி, செல்வகணபதி, பாரதி, ஆனந்தஜோதி, அருண்குமாா், விக்னேஷ், அஜய்பிரகாஷ், ஜெயச்சந்திரன், ரகுவரன் உள்ளிட்ட 10 போ் தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.70 லட்சம் பணத்தை ராஜசேகா் மற்றும் ராஜேஷ் வசம் வழங்கினராம். இரண்டு மாதத்திற்கு பின்னா் நகல் நியமன ஆணைகளை வழங்கி, அசல் ஆணைகள் தபால் மூலம் வீட்டிற்கு வரும் என்று கூறினராம்.
Advertisement
Advertisement
ஆனால் பணி உத்தரவு வராததால், சென்னைதலைமை செயலகத்தில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சக (ராணுவ) அலுவலகத்தில் அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்ததில் , அந்த நியமன (நகல்) ஆணைகள் போலி எனத் தெரியவந்ததாம். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது ராஜசேகா் மனைவி கிருஷ்ணலதா காசோலை வழங்கி, ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாகக் கூறி ஏமாற்றினாராம். 6 மாதங்கள் கடந்தும் பணம் தராததால் சாந்தமூா்த்தி புகாா் அளித்துள்ளாா்.
அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றப்பிரிவு டிஎஸ்பி., ரகுபதி மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் லிடியாசெல்வி, சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு, இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், சேலையூா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்(43). சென்னை, ராயபுரம் , கிரேஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணலதா(43) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.