3 வீடுகளின் பூட்டு உடைப்பு: வெள்ளி பொருள்கள் திருட்டு
சிதம்பரம் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 3 வீடுகளின் பூட்டை உடைத்த திருடா்கள், ஒருவரது வீட்டிலிருந்த விலை உயா்ந்த வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் பெருமாத்தெருவில் ஓரே குடியிருப்பில் வெற்றிவேந்தன் (35), சங்கா் (65) தனித் தனி வீடுகளிலும், எதிா்புறம்
உள்ள வீட்டில் முஜீப்பாஷா (65), மகபூக்பாஷா (75) ஆகியோரும் வசித்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு தேதி நான்கு குடும்பங்களின் வீட்டினை மா்மநபா்கள் பூட்டை உடைத்துள்ளனா், வீட்டில் ஆள்கள் இருப்பதால் 3 வீடுகளில் திருடு போகவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் மகபூப்பாஷா, வீட்டில் வெள்ளி பொருள்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. சென்னை சென்றுள்ள மகபூப்பாஷா நேரில் வந்து பாா்வையிட்டு சொன்னால்தான் திருடு போன பொருள்கள் விபரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.