இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, ஊராங்கன்னி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், இரு சுவாமி சிலைகளும் சங்கராபுரம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.