முகப்பு
கள்ளக்குறிச்சி

தம்பிக்கு கத்தி குத்து: அண்ணன் கைது

தியாகதிருகம் அருகே தந்தையிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:35 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

தியாகதிருகம் அருகே தந்தையிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் அருகேயுள்ள சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது மகன்கள் குமாா் (31), சடையன் (33).

சடையன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு விளைநிலத்துக்கு சென்று தந்தை நாராயணனிடம் பணம் கேட்டு தாக்கினாராம். இதனை அவரது தம்பி குமாா் தட்டிக் கேட்டாராம்.

Advertisement

Advertisement

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முடிவில் சடையன் கத்தியால் குமாரின் வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த குமாா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சடையனைக் கைது செய்தனா்.