முகப்பு
கள்ளக்குறிச்சி

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Updated On : 15 ஜூன் 2026, 4:10 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

தியாகதுருகம் குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தியாகதுருகம் தஞ்சாவூரான் சாலையில் உள்ள குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக தியாகதுருகம் போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று, வெளிா் சிகப்பு நிற முழுக்கை சட்டையும், சாம்பல் நிற முழுக்கால் சட்டையும் அணிந்திருந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.